உலக கொசுக்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக கொசுக்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக கொசுக்கள் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி, நரேந்திரன், ஜோயல், கருப்பண்ணன், விவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொசுக்களால் பரவும் நோய் குறித்தும், கொசு பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து கொசுக்களால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.