போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலால் உதவி ஆணையர் அழகிரிசாமி, தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், மாவட்ட பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.