பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூரில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-07-05 00:15 IST

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருவாரூர் மாவட்ட போலீசார் சார்பில் தினமும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொதுமக்களிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்