தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரியில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-19 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் விழுப்புரம் தீயணைப்பு மீட்பு சேவை நிலையமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். அகாடமிக் டீன் முத்துராஜா, மாணவிகள் மத்தியில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சிவசங்கரன் கலந்துகொண்டு, தீயின் வகைகளையும், தீ விபத்து எவ்வாறு ஏற்படுகிறது, தீயில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கிக்கூறினார். தொடர்ந்து, தீ பாதுகாப்பு தொடர்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மேலும் தீ விபத்து ஏற்படும்போது தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்