வேலாயுதம்பாளையம் காந்தியார் மண்டபத்தில் அனைத்து துறை தொடர்பான நலத்திட்டங்கள் குறித்த அரங்கம் அமைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நடைபெற்றது. இதற்கு புகழூர் தாசில்தார் முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்துகொண்டு அனைத்து துறை சார்பில் போடப்பட்டிருந்த அரங்கினை தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்கங்களை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.