தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி

தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி நடந்தது.

Update: 2022-07-23 18:18 GMT

புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ரூபா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் விஸ்வநாதன் வரவேற்றார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கொண்ட குழுவினர் நீர்நிலைகள், பொது இடங்களை சுத்தம் செய்தனர். இதில் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்