விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-10-22 19:01 GMT

குத்தாலம்:

குத்தாலம் சுற்று வட்டாரப் பகுதிகளான பஸ் நிலையம், பள்ளிகள், பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய வீதிகளில் குத்தாலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலரின் உத்தரவின் பேரில் குத்தாலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் பட்டாசுகளை கையாளும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பட்டாசுகளை பாதுகாப்புடன் எவ்வாறு வெடிக்க வேண்டும் எனவும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்