கஞ்சம்பட்டியில் தென்னை வேர்வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு

கஞ்சம்பட்டியில் தென்னை வேர்வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது

Update: 2022-05-29 14:29 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட கஞ்சம்பட்டி கிராமத்தில் தென்னை வேர் வாடல் நோய் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை தலைவர் கார்த்திகேயன், தென்னை வாடல் நோய் மேலாண்மை முறைகள் பற்றி பேசியதாவது:- தென்னைவேர் வாடல் நோய் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் கீழ் நோக்கி வளைந்து மனிதனின் விலா எலும்பு போல் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதோடு ஓரங்கள் கருகி காணப்படும். மேலும் இந்த நோய் தென்னை மரங்களை பைட்டோ பிளாஸ்மா என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் கூறும் உரிய ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மைய தலைவர் வேளாண்மை பிரனீதா, உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) புனிதா, வேளாண்மை உதவி இயக்குனர் பொள்ளாச்சி (தெற்கு) நாக பசுபதி ஆகியோர் தொழில்நுட்பம் குறித்து பேசினர். முன்னதாக கஞ்சம்பட்டி உள்ள தென்னை வேர் வாடல் நோய் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சில வயல்களை வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி தெற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்