தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-31 20:29 GMT

சிவகாசி,

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி அபிராமி வரவேற்றார். மாணவி மகாலட்சுமி தொகுத்து வழங்கினார். அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த சிவக்குமார் சிங்கார வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முடிவில் மாணவி பிரியங்கா நன்றி கூறினார். இதில் இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போட்டி தேர்வுக்கு தயார் ஆவது எப்படி? என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கணிதவியல் துறை சார்பில் நடைபெற்றது. துறைத்தலைவர் லலிதாம்பிகை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தொழில் முறை பயிற்சியாளர் தினேஷ்குமார் கலந்து கொண்டு போட்டி தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார். முன்னதாக மாணவி மதுமிதா வரவேற்றார். முடிவில் மாணவர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்