விழிப்புணர்வு கூட்டம்
பட்டாசு கடை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண்குண்டாம்பட்டியில் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பட்டாசு கடை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாரிஸ்வரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் ரகுபதி வரவேற்றார். கூட்டத்தில் பட்டாசு தொழிலில் அரசு விதிமுறைகளை பற்றி விளக்கிக் கூறப்பட்டது. பின்னர் பட்டாசு கடைகளில் பட்டாசுகளை பாதுகாப்பாக கையாளுவது பற்றியும், உரிமம் பெற்ற பட்டாசு கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசுகளை உற்பத்தி செய்யக்கூடாது எனவும், அரசின் நடவடிக்கை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.