தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-07-03 18:21 GMT

சின்னதாராபுரத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கம் சார்பாக தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

சின்ன தாராபுரத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சின்னதாராபுரம் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க தலைவர் மகேந்திரன் ஒருங்கிணைப்பு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்