பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கழுகூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடந்தது. ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் சரவணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்போம், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்று பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியவாறு சென்றனர். இதேபோல் தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.