தூய்மைக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
தூய்மைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவின்பேரிலும், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆலோசனையின் பேரிலும் சுகாதார ஆய்வாளர் சாம்கர்னல், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினராக ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைக்காக்க மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் நகரை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் ரோடு, 4 ரோடு, தா.பழூர் ரோடு, விருத்தாசலம் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள், அன்னை தெரசா கல்லூரி, நர்சிங் கல்லூரி மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.