சர்வதேச நீலவானின் தூய காற்று நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் சர்வதேச நீலவானின் தூய காற்று நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-09-11 17:21 GMT

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சர்வதேச நீலவானின் தூய காற்று நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை தாலுகா அலுவலக நுழைவு வாயில் அருகில் தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் மின்சார சிக்கனம், எரிபொருள் சிக்கனம், நீர் சிக்கனம், மரம் வளர்த்தல் போன்ற நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பியபடி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

இதில் உதவி பொறியாளர் கார்த்திவேலன், பிரேம்குமார், பள்ளிக்கல்வித்துறை மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, சாரணிய-சாரணர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோகன் உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்