பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆரணியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-30 09:14 GMT

ஆரணி

ஆரணியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார இயக்க மேலாளர் புனிதா தலைமையில் நடந்தது. மாநில மனிதவள பார்வையாளர் சுதாகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

இதேபோல ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார இயக்க மேலாளர் அருள்மொழி தலைமையில் நடந்தது.

இந்த இரு விழிப்புணர்வு ஊர்வலமும் தனித்தனியே நடைபெற்றது. இதில் பெண் சிசு கொலை, குடும்ப வன்முறையை தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் வன்கொடுமையை ஒழிப்போம் மற்றும் பெண் உரிமை பாதுகாப்பு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்த ஊர்வலம் கோட்டை மைதானம் நான்கு புறமும் சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு சென்று நிறைவு செய்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்