பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தலைஞாயிறில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-08-16 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பை முன்னிறுத்தி எனது மண், என்னுடைய காடு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார். ஊர்வலமானது தலைஞாயிறு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சின்னக்கடைத்தெரு, மேலத்தெரு, அக்ரஹாரம், பஸ் நிலையம் வழியாக சென்று பேரூராட்சியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பை, காகிதப்பையை கையில் எடுப்போம். கேரிப்பையை தூக்காதே, கேடு வரும் மறக்காதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்