மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-12 18:45 GMT

மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதற்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் நகரசபை தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறை தண்டனை

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலம் கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி 14420 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவுநீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.

மனிதர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றினால் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊா்வலம் நகரின் முக்கிய விதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்