விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோவில்பட்டியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2022-08-28 12:46 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

விழிப்புணர்வு மாரத்தான்

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம், இந்திய கனரக ஓட்டுனர் நல கூட்டமைப்பு, ரோட்டரி சங்கம் இணைந்து சாலை விபத்தில்லா இந்தியாவை உருவாக்குவோம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் இருந்து தொடங்கிய 25 கி.மீட்டர் ஆண்கள் பொது மாரத்தான் போட்டியில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட 40 பேர் பங்கேற்றனர். போட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

மாணவ-மாணவிகள்

தொடர்ந்து பெண்களுக்கான 20 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டியை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கான 12 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டியை இந்திய கனரக வாகன ஓட்டுனர் நல கூட்டமைப்பு மாநில துணை தலைவர் வரதராஜ் தொடங்கி வைத்தார்.

அடுத்து பள்ளி மாணவிகளுக்கான 10 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டியை ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தனராஜ், முருகன், கரிகாலன், ஆனந்த் ஆகியோர் செயல்பட்டார்கள்.

பரிசு

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பொதுப்பிரிவு மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை ராஜபாளையம் மாரிசரத், ஆழ்வார்திருநகரி அஜித்குமார், சேலம் கே.வெங்கடேஷ் பிடித்தனர். பெண்கள் பொது மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஐஸ்வர்யா, பாலகுமாரி, தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி பெண்கள் கல்லூரி மாணவி ஜெயபாரதி ஆகியோர் பிடித்தனர். மாணவர்கள் போட்டியில் காட்டு நாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகேஷ், மனோஜ் குமார், பன்னீர்குளம் துரைராஜ் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

மாணவிகளுக்கான போட்டியில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவி கனகலட்சுமி, வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா ஆகியோர் பிடித்தனர். இவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்