தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊா்வலம்

திருவண்ணாமலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊா்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.;

Update:2023-10-12 22:31 IST

தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கியது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

கலெக்டர் அலுவலக மேலாளர்கள் ரவி, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தாசில்தார் சரளா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் போளூர் சாலை வழியாக ஆவின் அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையது சுலைமான், திருவண்ணாமலை ஒன்றிய ஆணையாளர் பிரித்திவிராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் உள்பட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சுதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்