விழிப்புணர்வு பிரசாரம்

பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2022-09-20 20:00 GMT

சிவகாசி, 

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமாரி தங்க பாண்டியன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் விற்பனை செய்யாமல் இருக்க கடைகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள், பஞ்சாயத்து செயலர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், நீர்நிலைகள், பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், சுகாதார நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் கழிவறையை சுத்தமாக வைத்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்