விழிப்புணர்வு பிரசாரம்
கொரோனா பரவல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
சாத்தூர்,
கொரோனா பரவல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து சாத்தூர் நகராட்சியில் கலெக்டர் உத்தரவின்படி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையில், வட்டாட்சியர் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நகராட்சி மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.