இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-11-26 14:40 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தில் அன்னை மிரா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வாலாஜா தாசில்தார் நடராஜன் தலைமை தாங்கினார்.

முகாமில் இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்ப்பது, ஓட்டுரிமை குறித்த விழிப்புணர்வு, பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தங்களின் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.

முகாமில் அன்னை மிரா பொறியியல் கல்லூரி முதல்வர் கோபிநாதன், துணை முதல்வர் சரவணன், நிர்வாக அலுவலர் சாண்டில்யன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

முடிவில் தேர்தல் துணை தாசில்தார் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்