புத்தக திருவிழா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவாரூரில் நடக்கும் புத்தக திருவிழா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Update: 2023-03-14 18:51 GMT

நீடாமங்கலம்:

திருவாரூரில் புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுரவ தலைவர் சந்தானராமன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜா, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெகதீஸ் பாபு வரவேற்றார். புத்தகத் திருவிழாவை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கி பரிசளிப்பது என்றும், புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் தன்னார்வலர்களாக பணியாற்றிவரும் விழா குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது என்றும், நீடாமங்கலம் வட்டார அளவில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் பங்கேற்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆசிரியர்கள் கணேசன், ராஜேஷ்குமார், ரவிச்சந்திரன் சிவக்குமார், நூலகர் ராகவன், சதீஷ்குமார் மற்றும் இயக்க உறுப்பினர்கள் இளவழகன், சங்கர், செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்