உழவர் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

உழவர் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசினார்.

Update: 2022-08-27 15:10 GMT

ஊட்டி,

உழவர் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசினார்.

திட்ட கையேடுகள்

ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விவரம் பெற்று கூட்டத்தில் 76 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் விவசாயிகளிடம் கூறியதாவது:- நெல் பயிருக்கான சிறப்பு திட்டங்களை நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் திட்டங்களுக்கான கையேடுகளை வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு வேண்டும்

வேளாண்மை பொறியியல் துறை மூலம் எந்திரங்கள் வழங்கும் முன் விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். கூடலூர் உழவர் சந்தை விவசாயிகளுக்கு உழவர் சந்தை நடைமுறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இணையவழி அனுபோகச் சான்று மற்றும் அடங்கல் குறித்து எழும் கேள்விகள் பற்றி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறிய கருத்துகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காரம் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பகவத்சிங் மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்