மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடிக்கம்பம் அகற்றம்; போலீசில் புகார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தில் ரேஷன் கடை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 கம்பங்கள் அமைக்கப்பட்டு, தேசிய கொடி மற்றும் கம்யூனிஸ்டு கட்சி கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள், அந்த கொடி கம்பங்களை அகற்றிவிட்டு, அங்கு விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில், கட்சி நிர்வாகி சூரியமணலை சேர்ந்த தனவேல் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.