போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராத தொகை குறித்து விழிப்புணர்வு
போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராத தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் நகரில் தேரடி பகுதியில், அரசால் அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராத தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, துணை சூப்பிரண்டு சங்கர்கணேஷ், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், துண்டு பிரசுரங்களை வழங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது, விதிமீறல்களை தடுக்கும் பொருட்டும், உயிர்களை காக்கும் பொருட்டும் அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, அபராதத்தை தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.