சிறந்த நுகர்வோர் மன்றங்களுக்கு விருது:கலெக்டர் வழங்கினார்

தேனி மாவட்டத்தில் சிறந்த நுகா்வோர் மன்றங்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விருது வழங்கினார்.

Update: 2023-03-30 18:45 GMT

தேனி மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் உலக நுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சிறப்பாக செயல்பட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்களையும், சிறப்பாக செயல்பட்ட நுகர்வோர் மன்றங்களுக்கு விருதுகளையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) முத்துலட்சுமி, மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க தலைவர் புதுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்