விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2022-09-14 18:25 GMT

தரகம்பட்டி அருகே அரசகவுண்டனூரில் வசிக்கும் தனிநபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள கோவில் அருகே பொது இடங்களை ஆக்கிரமித்து அரசு வழங்கிய ஆட்டுக்கொட்டகை அமைத்துள்ளார். இதனை அகற்றகோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் ராஜாமணி, கடவூர் ஒன்றிய ஆணையர் கரிஷ்டி, தோைகமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 20-ந்தேதி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்த அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்