சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-08-10 16:49 GMT


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநகராட்சி தலைவர் ஆதிலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியை அமைப்பாளர்களே வழங்க அரசாணை வெளியிடக்கோரி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் விஜயாள் தலைமை தாங்கினார். ஒன்றிய இணைச்செயலாளர் ஜெயஸ்ரீ அனைவரையும் வரவேற்றார். கருப்பன்,ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விஜயலட்சுமி நிறைவுரையாற்றினார்.

---

மேலும் செய்திகள்