திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை தொடக்கம்
பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது. பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.