பால்வண்ண நாத சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாத சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2023-08-15 18:45 GMT

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் அம்பாள் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 6.50 மணிக்கு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.

விழாவில் கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி, ஓவர்சீயர் முத்துராஜ், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் திருநாளான 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு 13-ம் திருநாளான 27-ந் தேதி மாலை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்