அருணாச்சல ஈஸ்வரர் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா
அருணாச்சல ஈஸ்வரர் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பழையபாளையம் புதுப்பாளையம் செல்வ அருணாச்சல ஈஸ்வரர் சுவாமி கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அருணாச்சல ஈஸ்வரர், உண்ணாமலையம்மாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் காளிமுத்து, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் துரைராஜ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.