பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம்

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம் நடந்தது.;

Update:2023-08-26 02:17 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் அமைந்துள்ள ஒப்பனை அம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவிலில் கடந்த 15-ந் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை, மாலை இருவேளைகளும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 11-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை தேரோட்டம் நடைபெற்றது.

மாலை 6.45 தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரதவீதி வழியாக மீண்டும் நிலையத்தை இரவு 7.35 மணிக்கு அடைந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, டாக்டர் சதன் திருமலை குமார், கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிகர நிகழ்ச்சியான ஆவணி தவசு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்