ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

ஆலங்குளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2023-08-30 19:00 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் சுப்பையா மகன் அறிஞர்துரை (வயது 55). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். சம்பவத்தன்று ஆலங்குளம்- நல்லூர் சாலையின் அருகே உள்ள குளத்தின் பக்கத்தில் அமைந்துள்ள வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்களை ஏற்றுவதற்காக குளத்துகரை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறியதில் ஆட்டோ அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சிக்கிய அறிஞர்துரை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்