ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேர் காயம் போதையில் இருந்த டிரைவருக்கு பொதுமக்கள் அடி-உதை

ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். போதையில் இருந்த டிரைவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

Update: 2022-09-13 18:13 GMT

திருப்பத்தூர்

ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். போதையில் இருந்த டிரைவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

திருப்பத்தூர் டவுன் ராஜன் தெருவில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது. நேற்று பள்ளி முடிந்தவுடன் திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்த பஷீர் (வயது 30) தனது ஆட்டோவில் வழக்கமாக வரும் 10 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். பெரியகடை தெருவுக்குள் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை டிரைவர் பஷீர் திருப்பினார்.

அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த கோவில் தெருவை சேர்ந்த இம்ரான் மகன் முகமது சத்திக் (7), கான்சாகிப் தெருவைச் சார்ந்த பிரகதிக் மகள் ஆபிரா (5), இமான் சாகிப் தெருவை சேர்ந்த பாபு மகன் சுபிதின் (வயது9) உள்பட 6 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆட்டோவில் சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டு வெளியேற்றினர்.அப்போது ஆட்டோவை ஓட்டி வந்த பஷீர் குடிபோதையில் இருந்ததாக கூறி பொதுமக்கள் அவரை அடித்து உதை்த்தனர். அவர்கள் பிடியில் இருந்து டிரைவர் பஷீர் தப்பி ஓடினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 6 மாணவ, மாணவிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

=========

Tags:    

மேலும் செய்திகள்