ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-27 18:47 GMT

திருவாரூர்;

ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ் வழங்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். ஈ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்