வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை

கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் மினிபஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோக்களுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்றுகாலையில் ஆட்டோ டிரைவர்கள் 80 பேர் ஆட்டோக்களுடன் வந்தனர். திடீரென்று கோஷங்கள் எழுப்பியவாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஆட்டோக்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ீஈடுபட்டனர்.

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு நள்ளிரவில் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படுவதாகவும், இதனால் சட்டம்

-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், இதை கண்டித்தும் ரெயில் நிலையத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

போராட்டத்துக்கு டிரைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன், கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது இன்று(புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மினி பஸ் உரிமையாளர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து ெசன்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்