ஏ.டி.எம். எந்திரத்தில்கிடந்த பணத்தை வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
ஏ.டி.எம். எந்திரத்தில்கிடந்த பணத்தை வங்கியில் ஆட்டோ டிரைவர் ஒப்படைத்தார்.
கடையம்:
கடையம் செக்கடி தெருவை சேர்ந்தவர் கணேசன். ஆட்டோ டிரைவரான இவர் கடையம் பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.5 ஆயிரம் இருந்தது.
இந்த பணத்தை எடுத்த கணேசன், கடையம் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ஆறுமுகம் என்பவருடன் வங்கி மேலாளரிடம் பணத்தை ஒப்படைத்தார். கணேசனின் நேர்மையை பாராட்டி, கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டுகளை தெரிவித்தார்.