மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

ஒடுகத்தூர் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-02 18:15 GMT

ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டு, மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது மாணவி 2 மாதம் இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் வேணுகோபால் (வயது 40) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்