ஆட்டோ டிரைவர் தற்கொலை
கம்பத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்தவர் ரவி (52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் அவர் தனது மகன் விக்னேசுடன் (20) வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்னேசும் இறந்து விட்டார். இதனால் மனைவி, மகன் இறந்த சோகத்தில் ரவி இருந்து வந்தார். இந்நிலையில் மனமுடைந்த அவர் இன்று கம்பம்-காமயகவுண்டன்பட்டி சாலையில் சின்ன வாய்க்கால் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்