மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

Update: 2022-09-16 18:45 GMT

வாய்மேடு

தலைஞாயிறில், மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவர்

நாகை மாவட்டம் தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவாசகம்(வயது 65). இவரது மகள் தமிழ்மாலாவை, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுதீந்திரன்(36) என்பவர் திருமணம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மண்டகப்படி உபயம் செய்வதற்காக கோவிலுக்கு மணிவாசகம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ்மாலாவிடம், சுதீந்திரன் தகராறு செய்துள்ளார்.

இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சுதீந்திரன், அந்த வழியாக நடந்து சென்ற தனது மாமனார் மணிவாசகத்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே மணிவாசகம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

கைது

இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரை அடித்துக்கொன்ற சுதீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்