மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

Update: 2022-07-03 15:41 GMT

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38), ஆட்டோ டிரைவர்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் நெல்லிநகர் பகுதியை சேர்ந்த திரிச்சிகா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு சீனிவாசன் மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயம் அடைந்த திரிச்சிகாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து திரிச்சிகா அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்