பெயிண்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

விழுப்புரம் அருகே பெயிண்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

Update: 2023-07-11 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி பகுதியை சேர்ந்தவர் தயாநிதி(வயது 38). பெயிண்டர். இவர் சம்பவத்தன்று அவரது தந்தை வீராசாமியின் பெயரில் உள்ள 22 செண்ட் நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக சில நபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தயாநிதியின் தாய்மாமாவான அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார்(57) என்பவர் தயாநிதியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தயாநிதி கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்