மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆடிட்டர் பலி

Update: 2023-06-16 19:30 GMT

குருபரப்பள்ளி:-

சூளகிரி தாலுகா அளேசீபம் அருகே சின்னமட்டரை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் சிரஞ்சீவி (வயது 32). இவர் ஓசூர் தாலுகா தொரப்பள்ளி அருகே காந்திநகரில் தங்கி ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இவர், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஞ்சுப்பள்ளி அருகில் மோடடார்சைக்கிளில சென்ற போது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீரஞ்சீவி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிரஞ்சீவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்