விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-07-23 17:59 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்நேற்று ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. பின்னர் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி வழிப்பட்டனர். மேலும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மங்கலம்பேட்டை

இதேபோன்று மங்கலம்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷே ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்