இருசக்கர வாகன நிறுத்தும் இடத்திற்கான குத்தகை ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் ஏலம்
இருசக்கர வாகன நிறுத்தும் இடத்திற்கான குத்தகை ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் ஏலம்
காங்கயம்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூர் ஊராட்சி சந்தை அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு 2023-2024-ம் ஆண்டுக்கான கட்டணம் வசூல் செய்யும் உரிமம் பெறுவதற்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. .வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாதேவி தலைமை தாங்கினார். இதில் நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த 8 ஏலதாரர்கள் பங்கேற்று ஏலம் கோரினர். இறுதியில், நத்தக்காடையூர், பழைய வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பவர் ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். கடந்த 2 முறை இந்த ஏலம் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3-வது முறையாக ஏலம் நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது.