பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி மற்றொரு பெண் கைது

கருங்கலில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகையை பறிக்க முயன்ற மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-14 19:44 GMT

கருங்கல், 

கருங்கலில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகையை பறிக்க முயன்ற மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஓடும் பஸ்சில்...

கருங்கல் துண்டத்துவிளை பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் ராஜேஷ்குமார் (வயது45). இவருடைய மனைவி சஜிதா. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் நாகர்கோவில் செல்வதற்காக கருங்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பஸ்ஸில் ஏறினர்.

அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி ஒரு பெண், சஜிதா வைத்திருந்த தோள் பையில் இருந்து நகையை திருட முயன்றார்.

மற்றொரு பெண் கைது

இதனை கண்ட சக பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பிடிபட்டவர் மார்த்தாண்டம் காளைச்சந்தை பகுதியைச் சேர்ந்த ராஜ் மனைவி கவுரி (40) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்