வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி

பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி நடந்தது.

Update: 2022-09-16 19:45 GMT

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கந்தையா. இவருடைய மனைவி தெய்வநாயகி. இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றாா். பின்னர் ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தெய்வநாயகி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து பார்த்த போது வீட்டின் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், கண்காணிப்பு கேமராவில் தனது உருவம் பதிவாகி இருந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று பயந்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர். என்ற எந்திரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்