மின்மோட்டாரை திருட முயற்சி
தனியார் கல்லூரியில் மின்மோட்டாரை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்-நத்தம் சாலையில், ஆர்.எம்.டி.சி.காலனி அருகே தனியார் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில், குடிநீர் வினியோகம் செய்வதற்காக மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கல்லூரிக்குள் நுழைந்த மர்ம நபர், மின்மோட்டாரை திருட முயன்றார். அப்போது அங்கு வந்த தோட்ட காவலாளி வில்லியம், வார்டன் சேசு மரியான் ஆகியோர் அவரை மடக்கி பிடித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பராயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 30) என்றும், மின்ேமாட்டாரை திருட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.