வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பணம் பறிப்பு
வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பணத்தை பறித்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
சென்னை ஆவடியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 33), இவர் வண்டலூர் கேளம்பாக்கம் செல்லும் சாலையில் நல்லம்பாக்கம் தைலமரதோப்பு அருகே சாலை ஓரமாக மினி ஆட்டோவில் மெத்தை, தலையணை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அப்துல் ரஹீமை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து ரூ.24 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அப்துல் ரஹீம் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து வேங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த கங்காதரன் (வயது 26), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 24 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.